யாழ் செம்மணியில் யு.எஸ்.விடுதியின் கழிவை கொட்ட முற்பட்ட உழவியந்திரத்துக்கு நடந்த கதி!!

யாழ்ப்பாணத்தில் இயங்கும் யு.எஸ் விடுதியின் கழிவினை ஏற்றிச் சென்ற  உழவியந்திரம் செம்மணிப்பகுதியில் உள்ள வயல்ப்பகுதியில் கொண்ட முயன்றவேளையில் கையும் களவுமாக பிடிக்கப்பட்டது. உழவு இயந்திரம் புதையுண்ட நிலையில் முதலில் கோப்பாய் பிரதேச செயலாளர் அதனை நேரில் அவதானித்து சம்பவ இடத்தில் இருந்து பொலிசார் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்களிற்கும் தெரியப்படுத்தினார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு அப்பகுதி சுகாதார உத்தியோகத்தர் மற்றும் கோப்பாய் பொலிசார் ஆகியோர்  வந்ததோடு அப்பகுதி வயல் உரிமையாளர்களும் அவ்விடத்தில் ஒன்றுகூடு தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இதனையடுத்து வலி. கிழக்கு பிரதேச சபையின் செயலாளர் ஜெலிபன் சம்பவ இடத்திற்கு நேரில் வருகை தந்து குறித்த விடயத்தினை நேரில் பார்வையிட்டு பொலிசாரின் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கினார்.

குறித்த விடயம் தொடர்பில் வலி.கிழக்கு பிரதேச சபையின் செயலாளர் தகவல் தெரிவிக்கையில் ,

குறித்த பிரதேசத்தில் நீண்ட நாட்களாக கழிவு நீர் மற்றும் இதர கழிவுகளை இனம்தெரியாதவர்கள் வாகனங்களில் கொண்டுவந்து கொட்டுவதாக விவசாயிகள் முறையிட்டிருந்தனர் . இருப்பினும் இனம்கான முடியவில்லை. ஆனால் இன்றைய தினம் அவ்வாறு கழிவு நீருடன் ஓர் நீர்த் தாங்கி வாகனம் புதையுண்ட நிலையில் இருப்பதாக விவசாயிகள் தகவல் வழங்கியமையினால் சம்பவ இடத்திற்கு வருகை தந்தவேளையில் அது உண்மை என கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் சகல தரப்பும். ஒன்றினைந்து நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.்என்றார்.

இதேநேரம் இப்பகுதி விவசாயி ஒருவர் தகவல் தருகையில் ,

இப்பகுதியில் யார் எவர் என்றே தெரியாத வகையில் எந்த வகையானது என்றும் கூறமுடியாத மிகவும் துர் நாற்றம் வீசும் கழிவுகளை கொண்டுவந்து வயல் பிரதேசத்தில் காண்டுமிராண்டித் தனமாக கொட்டுவதனால் பெரும் அசௌகரியத்தினை எதிர் கொண்டு வருகின்றோம் . இதனால் வயல் செய்ய முடியாத நிலமைக்கு இட்டுச் செல்கின்றது. இன்று கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டுள்ளதனால் இனி நீதிமன்றத்திற்கு உட்பட்ட விடயம் . என்றார்.