ரொமான்டிக் த்ரில்லரில் இணையும் பீப் பிரதர்ஸ்...?

பீப் பாடல் வெளியான பிறகு சிம்பு - அனிருத் கூட்டணிக்கு கிடைத்த செல்ல பெயர், பீப் பிரதர்ஸ். இவர்கள் 'ஷீ' என்ற தெலுங்குப் படத்தில் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மங்காத்தாவில் நடித்த மஹத் சிம்பு, அனிருத் ஆகியோரின் நெருங்கிய நண்பர்.

அவர் ஷீ என்ற தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார். பாம்பே போலே என்பவர் இசை.

இந்தப் படத்தில் தலா ஒரு பாடல் பாடுவதற்காக சிம்பு, அனிருத் இருவரையும் மஹத் அணுகியுள்ளார்.

பீப் பிரதர்ஸ் இன்னும் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை. அதேநேரம் மறுக்கவும் இல்லை என்கிறார்கள்.