யாழில் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி நிறை வெறியல் வாகனம் ஓட்டியவருக்கு கடூழிய சிறை

யாழில் சாரதி அனுமதி பத்திரம் இன்றி மது போதையில் வாகனம் செலுத்திய நபர் ஒருவருக்கு இரண்டு மாதம் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த நபருக்கு 10 ஆயிரம் ரூபா அபராத பணமும் விதித்து ஊர்காவற்துறை
நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் தீர்ப்பளித்துள்ளார்.

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய நபரை
ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த நபரை நேற்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய
நிலையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட சாரதிக்கு தண்டப்பணமும், சிறைத்தண்டனையும் விதித்து
நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.