கெத்து காட்டும் ரஜினி முருகன்

பல ரிலீஸ் தேதிகளை கண்ட படமாக இருந்தாலும் பொங்கல் படங்களில் ரஜினி முருகனுக்குதான் அதிக திரையரங்கை ஒதுக்கியிருக்கிறார்களாம்.

பொங்கலுக்கு தாரை தப்பட்டை, கதகளி, கெத்து, ரஜினி முருகன் படங்கள் வெளியாகின்றன.

குடும்பத்தோடு பார்க்கிற மாதிரியோ, இரண்டுமுறை பார்ப்பது போன்றோ பாலா படம் எடுப்பதில்லை.

அதிலும் தாரை தப்பட்டை ஏ படம். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அனுமதியில்லை.

மற்ற மூன்று படங்களில் விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் அதிகம் நம்புவது ரஜினி முருகனை.

ரசிகர்களும் சிவ கார்த்திகேயன் படம் என்றால் முதல்நாளே கவுண்டரில் காத்துக்கிடக்க தயாராக உள்ளனர்.

இந்த க்ரேஸ் காரணமாக இந்தப் படத்துக்கே அதிகபட்சமாக 300 திரையரங்குகள்வரை ஒதுக்கப்பட்டிருக்கிறது.