14. 03. 2016 இன்றைய ராசிப் பலன்கள்

மேஷம்

கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த மனஉளைச்சல், டென்ஷன் யாவும் நீங்கி உற்சாகமடைவீர்கள். சுறுசுறுப்பாக பல வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. நட்பு வட்டத்தால் பலனடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் அலட்சியப் போக்கு மாறும். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

ரிஷபம்

ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒரு வித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்கள் பார்க்க வேண்டி வரும். உங்களைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள். அதை பெரிதுபடுத்த வேண்டாம். கணுக்கால் வலிக்கும். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

மிதுனம்

கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

கடகம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். புது பொறுப்புகள் ஏற்பீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

சிம்மம்

கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

கன்னி

கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்த முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

துலாம்

சந்திராஷ்டமம் தொடங்குவதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

விருச்சிகம்

கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை

தனுசு

கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்பை ஒப்படைப்பார். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், பிங்க்

மகரம்

புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, ரோஸ்

கும்பம்

எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம் வெள்ளை

மீனம்

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, கிரே