துன்னாலை அசம்பாவிதத்தில் கைது செய்யப்பட்ட 36 குடும்பத்தலைவர்கள் பிணையில் விடுதலை!! 2ம் இணைப்பு!!

வடமராட்சி கிழக்கில் மணல் ஏற்றி வந்த கன்டர் வாகனத்துக்கு பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் மேற் கொண்டு இளைஞர் ஒருவரைக் சுட்டுக் கொன்றனர். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இறந்த இளைஞனின் கிராமத்தவர்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ரயர் எரிப்புக்களையும் மேற்கொண்டனர். அத்துடன் பாதுகாப்புத் தரப்பினரின் வாகனங்களையும் சேதமாக்கினர்.

குறித்த அசம்பாவிதங்களை ஏற்படுத்தியவர்களை கைது செய்வதற்கு காவல்துறையினர் நடவடிக்கையை மேற் கொண்டிருந்தனர். காவல்துறையினர் மேற் கொண்டிருந்த நடவடிக்கையில் பலர் கைது செய்யப்பட்டனர்.

பலர் தலைமறைவாகினர். காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்களில் துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த 36 பேர் நேற்று பருத்தித்துறை நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஏனையவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை நீதிமன்றில் மேலதிக நீதவான் பி.சிவகுமார் அவர்களே குறித்த குடும்பத்தலைவர்களுக்கு பிணை வழங்கியுள்ளார்.

துன்னாலை அசம்பாவிதங்களை அடுத்து கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களும் அப்பகுதி முக்கியஸ்தர்களும் பாதுகாப்புத் தரப்பு மற்றும் ஜனாதிபதி செயலகம் போன்றவற்றுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கும் படி கேட்டுக் கொண்டனர்.

அத்துடன் நீதிமன்றமும் மேற்படி கைதானவர்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கு பிணை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

துன்னாலை அசம்பாவிதம் தொடர்பாக துன்னாலை சேது என்ற காவாலி மிகவும் தவறான தகவல்களை தன்னால் இயக்கப்படும் இணையத்தளத்தில் வெளியாகச் செய்து துன்னாலைப் பகுதி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தான்.

அவர்களை பயங்கரவாதிகளாகவும் ஆயுதம் கடத்துபவர்களாகவும் சித்தரித்து செய்திகள் வெளியிட்டிருந்தான். இவனது பொய் புரட்டுகளை,  குறித்த நபர்களுக்கு பிணை கொடுத்து பருத்தித்துறை நீதிமன்றம் புறந்தள்ளியுள்ளது.

நோர்வேக் காவாலியின் கொட்டத்தை அடக்கிய சிங்கம்

நோர்வேக் காவாலியின் கொட்டத்தை அடக்கிய சிங்கம்

துன்னாலை மக்களுக்கு ஏற்பட்ட சிக்கலை தீர்ப்பதில் அதி கூடிய அக்கறை செலுத்திய யாழ் இராணுவத் தளபதி

துன்னாலை மக்களுக்கு ஏற்பட்ட சிக்கலை தீர்ப்பதில் அதி கூடிய அக்கறை செலுத்திய யாழ் இராணுவத் தளபதி