யாழில் மெர்சல் பட டிக்கெட் விற்பனையில் அரங்கேறும் பாரிய பண மோசடி

தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளி தினத்தன்று வெளிவர இருக்கும் மெர்சல் திரைப்படத்துக்கான டிக்கெட் விற்பனை தொடர்பில் பாரிய பண மோசடி இடம்பெற்றுவருவதாக அறியப்பட்டுள்ளது.

படத்துக்கான சிறப்பு காட்சிகள் காண்பிப்பதற்காக மாநகரசபை அனுமதி பெறப்படுதல் அவசியம் எனவும், மெர்சல் படத்துக்கான சிறப்பு காட்சிகளுக்கு மாநகரசபை அனுமதி வழங்கப்படவில்லை எனவும் மாநகரசபை ஆணையாளர் திரு வாகீசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இப் படத்திற்கான போலி டிக்கெட்கள் rathee event management நிறுவனம் மூலம் தீசன் அமிர்தலிங்கம் என்பவனால் ஏமாற்றி விற்கப்பட்டு வருவது அம்பலமாகியுள்ளது 

இவ் டிக்கெட்கள் சுமார் ரூ1000  ல் இருந்து 3000 வரை அமோகமாக விற்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக திரையரங்க உரிமையாளர்களை கேட்டபொழுது-

படத்திற்கான bannar, poster, ஓட்டுதல் திரைப்பட ஒழுங்குகள் செய்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் யாழ் விஜய் ரசிகர் மன்ற அங்கத்தவர்களுக்கு குறைந்த அளவு டிக்கெட்கள் மட்டும் வழங்கப்படுவது வழமை எனவும், இது தவிர வேறெந்த சிறப்பு காட்சி டிக்கெட்களோ, முற்பதிவு டிக்கெட்களோ யாழின் எந்த ஒரு திரையரங்குகள் சார்பிலும் விற்பனை செய்யப்படவில்லை எனவும் யாரும் இதனை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் கூறினார். 

2016 ம் ஆண்டு மாவீரர் தினத்தில் கோலிப்பண்டிகை நடாத்த முயன்று தமிழின ஆதரவாளர்களால் நையப்புடைட்க்கப்பட்டு யாழில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட தீசன் அமிர்தலிங்கம் என்பவனே இம் மோசடிக்கு சூத்திரதாரி என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேற்படி தீசனே யாழ்பாணத்திற்கான ரஜனியின் வருகை தடைப்பட்டதற்கு திருமாவளவன் , வேல்முருகன்னுக்கு எதிராக 27.03.2017 அன்று நல்லூர் முற்றலில் கோமாளித்தனமான போராட்த்தை நடத்தியவன் என்பது குறிப்பிடத்தக்கது.

இவன் rathee event management என்னும் நிறுவனத்தின் போர்வையில் பெண்களை வைத்து கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபடுவது யாழ்மண்ணின் கலாச்சாரத்தை சீரழிப்பது பண மோசடிகளில் ஈடுபடுவது அம்பலமாகியுள்ளது. 

இவனின் மோசடி விளம்பரங்களை நம்பி இனியும் யாரும் ஏமாற வேண்டாம்.

தமிழ் மக்களின் உணர்வுகளை மழுங்கடிக்க கலாச்சாரத்தை சீரழித்து இளைஞர்களின் கவனத்தை திசை திருப்புதல் கேளிக்கைகளில் ஆர்வத்தை தூண்டுதல் ,சினிமா மோகத்தை தூண்டிவிடுதல் போன்றவற்றில் ஈடுபடும் இவ்வாறான விஷமிகளை யாழின் புனித மண்ணில் வேரூன்ற அனுமதிக்கக்கூடாது.