தாரை தப்பட்டை வாய்ப்பு கிடைக்க 'அவர்தான்' காரணம் - வரலட்சுமி யாரைச் சொல்கிறார்?

பாலாவின் அவன் இவன் படத்தில் நடித்த விஷால்தான், தனது தோழி வரலட்சுமிக்கு தாரை தப்பட்டையில் வாய்ப்பு கிடைக்க காரணமாக இருந்தார் என்ற வதந்தி உலவி வருகிறது. தாதரை தப்பட்டை பத்திரிகையாளர் சந்திப்பில் இதனை வரலட்சுமியிடம் கேட்டேவிட்டனர்.

விஷால் காரணமில்லை, சங்கீதா மேடம்தான் காரணம் என்றார் வரலட்சுமி. தாரை தப்பட்டை நடனம் சம்பந்தப்பட்ட கதை என்பதால் வரலட்சுமியிடம் பேசவிருப்பதாக பாலா சங்கீதாவிடம் சொல்ல, சங்கீதா அதனை வரலட்சுமியிடம் கூறியுள்ளார். அதன் பிறகே பாலா - வரலட்சுமி சந்திப்பு நடந்துள்ளது.

அதன் பிறகும் ஒரு மாத நடனப் பயிற்சிக்குப் பிறகே வரலட்சுமியை நடிக்க வைப்பது என முடிவு செய்தாராம் பாலா.