குற்றமும் தண்டனையும் என்னை வித்தியாசமாக காட்டும்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் திருடன் போலீஸ் நாளை வெளியாகிறது. இதுவரை கிராமத்து வேடங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா இந்தப் படத்தில் நகத்து கல்லூரி மாணவியாக விதவிதமான மாடர்ன் உடை அணிந்து நடித்துள்ளார். இதுவரை நான் நடித்ததில் இது முற்றிலும் வித்தியாசமான வேடம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர் அந்த கிரெடிட்டை தற்போது வேறு படத்துக்கு தந்திருக்கிறார்.

அந்தப் படம், குற்றமும் தண்டனையும்.

காக்கா முட்டை படத்தின் மூலம் சர்வதேச கவனம் பெற்ற இயக்குனர் மணிகண்டனின் இரண்டாவது படம் குற்றமும் தண்டனையும். விதார்த் தயாரித்து நடிக்கும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ஹீரோயின். இதுவரை நான் நடித்ததிலேயே இதுதான் வித்தியாசமான வேடம் என்று மகிழ்ச்சியுடன் கூறி வருகிறார்.

படத்தின் கதை சிறப்பாக இருந்ததால் விதார்த்தே தனது டான் ஃபிலிம்ஸ் சார்பில் குற்றமும் தண்டனையும் படத்தை தயாரிக்கிறார். ஜீ.வி.பிரகாஷ் இசை.

விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.