வானத்தில் மிதந்த காதல் ஜோடிகள்!! வல்வெட்டித்துறைக்கு படையெடுத்த பொதுமக்கள்

இன்று மாலை வல்வெட்டித்துறைப் பகுதியில் தைப் பொங்கல் திருநாளை கொண்டாடும் முகமாக பட்டம் விடும் போட்டி இடம் பெற்று வருகின்றது. இதனைப் பார்வையிடுவதற்காக பல பகுதிகளிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு திரண்டவண்ணம் இருந்தார்கள். பல வகையான வண்ண வண்ண பட்டங்கள் வானத்தில் பறக்கவிடப்பட்டன. அதில் காதல் ஜோடிகள் சேர்ந்திருந்த ‘லவ்ரூடே‘  பட்டம், பறக்கும் தட்டு, முத்துத்தேர், நாகபாம்பு என ஏராளமான பட்டங்கள் மக்களின் மனத்தைக் கவர்ந்தனவாக இருந்தன.