உலகிலேயே மிக அழகான குதிரைகள்

உலகிலேயே மிக அழகானதாக கணிக்கப்படும் ஒரு இனக் குதிரையின் படங்களை , சமூக வலைத்தளங்கள் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்துள்ளன 

முன்பொரு காலத்தில் துருக்கி சாம்ராஜ்யத்தை ஆண்ட துர்க்கொமானின் பரம்பரையில் வந்த இந்த இனக் குதிரைகள்தான், உலகிலேயே மிக அழகான குதிரைகள் என்று வல்லுனர்கள் கணித்துள்ளார்கள் இதை Akhal-Teke என்ற இனத்திலிருந்து வந்த குதிரைகள் என்கிறார்கள் .

உலகெங்கும் , இந்த இனக் குதிரைகள் மொத்தமாக 3,500 வரையில் உள்ளதாக சொல்லப்படுகின்றது . இதன் மினுமினுத்த பொன் நிற உடல் தங்கக் குழம்பில் தோய்த்து எடுக்கப்பட்டது போன்றுள்ளது .

இதனுடைய உயரம் 147 தொடக்கம் 163 சென்டி மீட்டர் வரை இருக்கும் என்று சொல்லப்டுகின்றது. சீனாவில் இந்தக் குதிரைகள் நேராக சொர்க்கத்திலிருந்து வந்து குதித்த குதிரைகள் என்று சொல்கிறார்கள்.

மனிதர்களால் பழக்கி வளர்க்கப்பட்ட குதிரை இனங்களுள் முதல் இனமாக நோக்கப்படும் இந்த இனக் குதிரைகள் 3000வருடங்களுக்கு முன்பு இன்றைய துருக்கியின் Achal என்னும் இடத்தில் காணப்பட்டுள்ளதாக கூறப்படுவது , இங்கே குறிப்பிடத்தக்கது