யாழில் வேலை வாங்கித் தருகின்றேன் என கூறி பெண்களை வேட்டையாடிய சேது (Part 1)

நோர்வேயில் இருந்து வந்து ஐ.தே.க கட்சியின் ஆதரவாளராக செயற்பட்டு அந்தக் கட்சியின் பெயரை கேவலப்படுத்தி யாழ்ப்பாணத்தில் பல அலங்கோலங்கள் செய்து பருத்தித்துறை நீதிமன்றத்தால் சிறைக்குள் தள்ளப்பட்டு பின்னர் வெளியேறி நோர்வேக்கு ஓடிய துன்னாலையைச் சேர்ந்த சேது யாழ்ப்பாணத்தில் என்ன கேவலங்கள் செய்தான் என்பதை போட்டுடைக்கின்றார் சாவகச்சேரியைச் சேர்ந்த ஐ.தே.க உறுப்பினர் சர்வா.

அவர் நோர்வே சேது பற்றி தெரிவிக்கும் அதிர்ச்சித் தகவல்களின் சாராம்சம் இதுதான்

நோர்வே சேது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண ஐ.தே.க அரசியல்வாதிமூலமாக எனக்கு அறிமுகமானான்.

அதன் பின்னர் கட்சி ரீதியாக தன்னுடன் நட்பானான். தனக்கு சாவகச்சேரியில் கட்சியின் நடவடிக்கைகளுக்காகவும்  களைப்பாறுவதற்காகவும் தங்குவதற்கு ஒரு இடம் ஒன்றை ஒழுங்குபடுத்தி தருமாறு கேட்டான்.

தானும் அவன் கட்சியில் பற்றுடன் இருப்பதாக எண்ணி இடம் ஒழுங்குபடுத்திக் கொடுத்தேன். ஓரிரு நாட்களில் அங்கு அவன் வாகனங்களில் பெண்களை கொண்டு வருவதாக எனக்கு எனது கட்சி ஆதரவாளர்கள் தெரிவித்தார்கள்.

சேதுவுக்கு 3 மகள்கள் இருப்பதால் அவர்களையே அங்கு கொண்டு வந்தான் என நான் எண்ணினேன். ஆனால் வேலை வாய்ப்பு தருகின்றேன் என தெரிவித்து அங்கு பெண்களைக் கொண்டு வந்து துஸ்பிரயோகம் செய்தது எனக்கு தெரியவந்தது.

உடனே நான் அவனை எச்சரித்தேன். இது நோர்வே அல்ல இது யாழ்ப்பாணம். கலாச்சாரம் மிக்கது. இவ்வாறான செயல்கள் செய்ய வேண்டாம் என கடுமையாக எச்சரித்தேன்.

அதன் பின்னர் அவன் அங்கு வரவில்லை. ஓரிரு நாட்களில் அவன் பொலிசாரால் பிடிக்கப்பட்டு நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்டான். அவன் செய்த குற்றம் என்ன என்பது பத்திரிகைகளில் அனைவரும் அறிந்ததே. நான் சிறைக்கு சென்ற போது அவன் கண்ணீர் விட்டு அழுதான். அத்துடன் நான் அவனில் இரக்கம் கொண்டு சட்ட ஒழுங்குகள் மேற்கொண்டு அவனை வெளியே எடுப்பதற்கு முயற்சிகள் மேற் கொண்டிருந்தேன் எனவும் சர்வா தொடர்ந்து அவனது அதிர்ச்சிகரமான கேவலமான நடவடிக்கைகள் பற்றி தெரிவிக்கின்றார். கேளுங்கள்.

சேது தொடர்பான பகுதி 2 மிக விரைவில் ஆதாரங்களுடன் புகைப்படங்களுடன் எம்மால் வெளியிடப்படும். அதுவரை காத்திருங்கள் அன்பு வாசகர்களே!!