களை இழந்து நிற்கிறது பருத்தித்துறை துறைமுகம்

களை இழந்து நிற்கிறது பருத்தித்துறை துறைமுகம்

முழுமையாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த காலம் போய் இப்பொழுது பொது மக்கள் சென்று வரக் கூடியதாக இருக்கிறது.

இருந்தாலும் கலகலப்பு திரும்பவில்லை

ஆதி காலத்தில் தென்னிந்திய நகரங்களுக்கு பருத்தி ஏற்றுமதி செய்யும் துறைமுகமாக விளங்கியது. பருத்தித்துறை துறைமுகம்.

பின்னரும் பிசியான துறைமுகமாக தான் இருந்தது. custom office இருந்தது.

புலிகளிடம் யாழ் குடாநாடு இருந்த போது யாழ் குடாநாட்டிற்கான கடல்வழி போக்குவரத்து இந்த துறைமுகம் ஊடாக நடந்தது. திருகோணமலையில் இருந்து பருத்தித்துறைக்கு பயணிகள் மற்றும் சரக்குக் கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

1995இல் இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து பருத்தித்துறை நகரைக் கைப்பற்றியபோது இந்த துறைமுகமும் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்த துறைமுகம் பரபரப்பான ஒரு துறைமுகமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இது துறைமுகத்தின் மேற்கு புறத் தோற்றம். முன்பு இங்கிருந்து பார்த்தால் magistrate's quarters தெரியும்.

இப்பொழுது ஆயுத படைகளின் முகாம் இருக்கிறது. சவுக்க மரக்கன்றுகள் நாட்டி அழகாக வைத்திருக்கிறார்கள். 

நாங்கள் மாணவர்களாக இருந்த காலத்தில் முதிய சவுக்க மரங்கள் நின்றன.