பக்கத்து பக்கத்து வீட்டு காரர்கள்

பக்கத்து பக்கத்து வீட்டு காரர்கள்

இவர்கள் எப்பொழுது அருகருகே வசிக்கத் தொடங்கினார்கள் என்பது எனக்கு தெரியாது.

நான் அறுபதுகளில் ஹாட்லி கல்லூரியில் படித்த 1960 களிலேயே முன்னவர் இங்கே குடி புகுந்திருந்தார்.

ஓரு பெருமரம். அதன் அடியில் ஒரு சிறிய கொட்டில். அதற்குள் ஒரு சூலம். அவ்வளவுதான் அந்த நாட்களில். 1995 வரை இவர் மட்டும்தான் தனியாக குடியிருந்தார்.

அதன் பின்னர் பலகாலமாக அது பொதுமக்களுக்கு தடை செய்யப்பட்ட பிரதேசமாக இருந்தது.

ஒரு சில மாதங்களுக்கு முன்னர்தான் தடை நீக்கப்பட்டது.

அண்மையில் தான் நான் அவ்வழியே செல்லும் போது பின்னவரும் அருகே குடிபுகுந்துள்ளதை காண முடிந்தது. சுற்றிலும் வெள்ளை மதிலுடன். அரச மரமும் இருக்கிறது என எண்ணுகிறேன்

எப்பொழுது புதியவர் வந்தாரோ தெரியவில்லை.

இவர்கள் குடியிருப்பு பருத்தித்துறை துறைமுகத்திற்கு சரியாக நேர் எதிரில்.

அயலவர்கள் சண்டை சச்சரவு இல்லாமல் வாழ்ந்தால் சரி.