அரசியல் காரணத்தால் உன்னிக்கிருஸ்ணனின் இசை நிகழ்ச்சி ரத்து!

யாழ்ப்பாணம் வின்சர் தியோட்டர் மைதானத்தில் இன்று நடைபெறவிருந்த உன்னிக்கிருஸ்ணனின் இசை நிகழ்ச்சி ரத்துச் செய்றயப்பட்டுள்ளது. குறித்த நிகழ்ச்சியை யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல் கட்சி ஒன்று எதிர்த்து சுவரொட்டிகள் ஒட்டியதாலே இந் நிகழ்ச்சியை ரத்துச் செய்துள்ளதாக நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு குழு அறிவித்துள்ளது. நிகழ்ச்சிக்கான ரிக்கட்டுக்களை வாங்கியவர்கள் அதனை விற்றவர்களிடம் கொடுத்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என ஒழுங்கமைப்புக் குழு அறிவித்துள்ளது.