நாளை யாழ்ப்பாணத்தில் பாட வரும் உண்ணிக்கிருஸ்ணன் புரட்சி பாடல் பாடுவாரா?

யாழ்ப்பாணத்தில் நாளை பிரபல தென்னிந்திய சினிமாப் பாடகர் உண்ணிக்கிருஸ்ணன் மற்றும் அவரது மகள் ஆகியோரின் இன்னிசைக் கச்சேரி நடைபெறவுள்ளது. யாழ் வெலிங்கடன் தியேட்டர் மைதானத்தில் மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ள இந்த இன்னிசைக் கச்சேரியில் புரட்சிப் பாடல்களும் இடம் பெறுமா? என பல ரசிகர்களும் கேள்வி எழுப்பியுள்ளார்களாம். இதே வேளை கடந்த ஓரிரு வருடத்திற்கு முதல் யாழ்ப்பாணம் வந்து சென்ற  உண்ணிக்கிருஸ்ணன் அப்போதய அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா தொடர்பாக சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் தனது முகப்புத்தகத்தில் அது தொடர்பாக பதிவொன்றும் வெளியிட்டுள்ளார்.