யாழில் திருச்செல்வத்தின் தலை முடி செய்த சாதனை!

தனது தலைமுடியினால் ஆயிரம் கிலோகிராத்திற்கு அதிகமான எடையுள்ள ஹன்ரர் வாகனத்தினை இழுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

மட்டுவில் வாசி. சிவன்வீதி மட்டுவில் வடக்கு சாவகச்சேரி பகுதியினை சேர்ந்த செல்லையா திருச்செல்வம் என்ற நபரே இவ்வாறு தனது திறமையினை காட்டி சாதனை படைத்துள்ளார்.

நேற்றையதினம் மட்டுவில் அம்மன்கோயில் பகுதியில் ஆரம்பித்து 200 மீற்றர் தூரம் வரை இழுத்து இச் சாதணை நிகழ்வினை புரிந்துள்ளார்.

எனிவரும் காலங்களில் பாரிய டிப்பர் வாகனம் மற்றும் பாரவூர்தியினை இழுத்து புதிய சாதனையின் மைல்கல்லினை அடையவுள்ளதாக அவர் திடசங்கட்பம் பூண்டுள்ளார்.