யாழில் வீதி விபத்து: மூன்று இளைஞர்கள் படுகாயம்

யாழில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூன்று இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

யாழ். மருதனார்மடத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மூன்று இளைஞர்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்துச் சம்பவத்தில் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த எஸ். நரேஷ், உரும்பிராயைச் சேர்ந்த ர. நவசிகன், அதேயிடத்தைச் சேர்ந்த சி. தினேஸ் ஆகியோரே படுகாயம் அடைந்துள்ளனர்.

கவனயீனமான முறையில் மோட்டார் சைக்கிள் செலுத்தியமையே இந்த விபத்துக்கானகாரணமென சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.