தெற்காசியாவில் மூன்றுமுறை தங்கப்பதக்கம் பெற்ற தமிழன் இளைஞன்..

கிழக்கு மாகாணம் கல்முனை தமிழ்ப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சேனைக்குடியிருப்புக் கிராமத்தைச் கராத்தே வீரர் சௌந்தரராஜா பாலுராஜ் தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் கராத்தே சுற்றுப்போட்டியில் தொடர்ச்சியாக மூன்றுமுறை முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை பெற்றுச்சாதனை படைத்துள்ளார்.

2014, 2016 ஆம் ஆண்டுகளில் இந்திய தலைநகர் புதுடில்லியில் இடம்பெற்ற கராத்தே சுற்றுப்போட்டியின் சிரேஸ்ட பிரிவு கராத்தே போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தைப் பெற்றுச் சாதனை படைத்திருந்தார்.

இறுதியாக இந்த மாதம் 05ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற தெற்காசிய கராத்தே சுற்றுப்போட்டியில் முதலிடம்பெற்று மூன்றாவது தடவையாகவும் தங்கப்பதக்கம் பெற்ற ஒரேயொரு ஸ்ரீலங்கா வீரர் என்ற பதிவொன்றையும் இவ் இளைஞன் ஏற்படுத்தியுள்ளார்.

இவரது வெற்றிக்கு காரணமான பயிற்றுவிப்பாளர் பொறியியலாளர் எஸ்.முருகேந்திரன். இவர் வடக்கு, கிழக்கிலிருந்து ஆசிய கராத்தே போட்டிகளுக்கு மத்தியஸ்தராகத் தெரிவான முதல் வீரராவார்.