வித்தியா படுகொலை; லலித் ஜெயசிங்கவின் பிணை ஏன் மறுக்கப்பட்டது?

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.