கதிர்காமத்தில் கிளிநொச்சியை சேர்ந்த இருவர் பலி!

கதிர்காமத்தில் பேருந்தொன்று பின்னோக்கி பயணித்த போது அதில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

கதிர்காமம் நகருக்கு அருகில் உள்ள மைதானம் ஒன்றில் பெரஹேராவை பார்க்க வந்த சிலர் உறங்கியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பின்னர் அவர்கள் வந்த பேருந்தின் சாரதி பேருந்தை பின்னோக்கி செலுத்திய போது அங்கு உறங்கி கொண்டிருந்த சிலர் பேருந்தின் சில்லுகளில் சிக்கியுள்ளனர்.

இதில் 3 பேர் படுகாயமடைந்து கதிர்காமம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள், கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 18 மற்றும் 41 வயதான இரண்டு பேர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.