சற்றுமுன் வவுனியாவில் கோர விபத்து:சாரதி பலி!

வவுனியாவில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்து வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

.

இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், 

இன்று பிற்பகல் 1.45 மணியாவில் வவுனியா இ.போ.ச. சாலைக்கு முன்பாக விமானநிலையத்திலிருந்து வவனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹயெஸ் வான் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஹன்ரர் வாகனத்துடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 
விபத்தில் வாகன சாரதியாக சுவிஸ்நாட்டைந் சேர்ந்த காந்தன் வயது 56 என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் படுகாயமடைந்த தர்சன் 26வயது, அப்றஜிதன் 23வயது, கிரிதரன் 25வயது ஆகியோர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.