பாழடைந்து கிடக்கும் ரேவு ஆஸ்பத்திரி

பாழடைந்து கிடக்கும் ரேவு ஆஸ்பத்திரி

இன்றைய இளைய தலைமுறையினருக்கு இந்த ஆஸ்பத்திரி பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் இந்த ரேவு ஆஸ்பத்திரி ரெம்பவும் பிரசித்தமானது.

சரியாக சொல்லப் போனால் இது ஒரு dispensary. வெளிவாரி சிகிச்சை நிலையம் எனலாம். இலவச சேவை அளிக்கும் அரச மருத்துவ நிலையம்.

பபருத்தித்துறை துறைமுகத்திற்கு அருகாமையில், கொட்டடி பிள்ளையார் முன்றலில் உள்ளது.

போர் தொடங்கி பருத்தித்துறை துறைமுக பிரதேசம் இராணு கட்டுப்பாட்டில் வந்ததும், அங்கிருந்த மக்களைப் போலவே ரேவு ஆஸ்பத்திரி யும் இடம் பெயர்ந்தது.

நீண்ட காலமாக ஆத்தியடி பிள்ளையார் கோவிலடியில் இயங்கியது.

பின் மீண்டும் இடம் பெயர்ந்து தும்பளை வீதிக்கு சென்றது.

பல உதவி மருத்துவ அதிகாரிகள் ரேவு ஆஸ்பத்திரி யில் தன்னலமற்ற சேவை செய்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர்.

ஓரு காலத்தில் மக்களுக்கு அரும் சேவை ஆற்றிய இடம் இடிந்து பாழடைந்து கிடப்பது மன வேதனை அளிக்கிறது.

நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டிய இடம். 

பொறுப்பான இடத்தில் இருப்பவர்கள் ஆவன செய்வார்களா?

ரேவு என்பது போர்த்துக்கீச அல்லது ஒல்லாந்தர் கால சொல் வழக்கா?