விபச்சார கும்பலுக்கு காதலி 60000 ரூபாய்க்கு விற்பனை!

கண்டியில் பிரிம்ரோஸ் பூங்காவில் நடத்தப்பட்டு வந்த விபச்சார இல்லம் இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸாரால் கடந்த வாரம் முற்றுகையிடப்பட்டது.

விருப்பத்துக்கு மாறான வகையில் பலவந்தமாக பல பெண்கள் கடத்தி வரப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தார்கள்.

விபச்சார இல்லம் மூன்று மாடி கட்டிடம் ஆகும். இதன் ஒவ்வொரு மாடியிலும் 07 அதிநுட்ப கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. அத்துடன் முதலாம் மாடியிலும், மூன்றாம் மாடியிலும் பாதுகாப்பு ஊழியர்கள் கடமைக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர்.

பலவந்தமாக விபச்சாரத்துக்கு கொண்டு வரப்பட்டு இருந்த பெண்கள் இரண்டாம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர்.

இங்கிருந்து வெளியில் தப்பி செல்வது நடக்க முடியாத காரியம் என்றே கூறலாம். இங்கு வருகின்ற வாடிக்கையாளர்கள் கண்காணிப்புக் கமரா மூலம் நன்றாக சோதனைக்கு உட்படுத்தப்படுவார். பின்பு இரண்டாம் மாடிக்கு சென்று பிடித்த பெண்ணை தெரிவு செய்வார்.

இங்கு வந்திருந்த யுவதிகளில் ஒருவர் கூறுகையில் காதலனால் கேளிக்கை நிகழ்ச்சிக்கு என்று பொய் சொல்லி அழைத்து வரப்பட்டு இக்கும்பலுக்கு 60000 ரூபாய்க்கு விற்கப்பட்டார் என்றும் இங்கிருந்து தப்பி செல்ல பல தடவைகள் எடுத்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன என்றும் சொன்னார்.