அமெரிக்காவிலுள்ள வீடுகளை ஒத்த வீடுகள் யாழ்ப்பாணத்தில்

வடக்கு மக்களுக்கு சுற்று சூழலுக்கு ஏற்ற தரமான வீடுகளைப் அமைத்துக் கொடுக்கும் நோக்குடன் வீட்டுத்திட்டத்தில் பங்கெடுக்கப்படுவதற்கான விருப்பத்தை சமுக நலனில் அக்கறை கொண்டுள்ள அமெரிக்கன் ரேட் அன்ட் டெக்னோலஜி சர்வதேச நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வடமாகாணசபை உள்ளிட்ட ஏனைய தரப்பினருடன் குறித்த நிறுவனம் சந்தித்து கலந்துரையாடவுள்ளது.

வடமாகாணத்தில் காணப்படும் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்தில் பங்கெடுக்க ஆர்வமாகவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிலுள்ள வீடுகளை போன்று மெக்சின் நாட்டின் சைபர் சீமென்டினால் நவீன தொழில்நுட்ப ரீதியில் இந்த வீடுகள் அமைக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கன் மரட் அன்ட் டெக்னோலறி இன்டர்நசனல் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியான ரி. பரமானந்தன் ஆனந்த் இது தொடர்பில் நேற்று யாழ். ஊடக மையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

தமது நிறுவனம் தரம் வாய்ந்த குறைந்த செலவிலான வீட்டுகளை அமைத்துக் கொடுக்கும் நிறுவனமாகும்.

550 சதுர அடியில் 12 இலட்சம் ரூபாவில் வீடுகளை அமைத்து கொடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த வீட்டில் இரண்டு அறைகள், சமயல் அறை , வீட்டுடன் இணைந்த குளியலறை மற்றும் முன்விராந்தை என்பன அடங்குவதாக அமெரிக்கன் மரட் அன்ட் டெக்னோலறி இன்டர்நசனல் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியான ரி. பரமானந்தன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.