துன்னாலையூடாக யாழ் குடாநாட்டை நன்நீராக்குவோம்.

துன்னாலையூடாக யாழ் குடாநாட்டை நன்நீராக்குவோம்.

துன்னாலைப் பிரதேசத்தை வளப்படுத்தும் சிறிய புதுக்குளமும் பழைய பெரிய குளமான மாக்கிரான் குளமும் பழைய சிறிய குளங்களில் ஒன்றான கொடிக்காட்டுக் குளமும் உண்டு. மாரி காலத்தில் மாக்கிரான் குளம் நிரம்பி வாய்க்கால் வழியோடி கழிக்கடலை அடைந்து வீணாகிறது. 

அதைவிட பெரிய  குளம் அமைத்தால் துன்னாலையின் நிலக்கீழ் நீர் நன்நீர் ஆகும். 

துன்னாலை வடக்கு வாய்க்கால் ஊடாக துன்னாலை கிழக்கையடைந்து துன்னாலை தெற்கின் ஊடாக கழிக்கடலை சென்றடைகிறது.

துன்னாலை கிழக்கில் பல ஆண்டுகளாக வயல் செய்கைக்குட்படாத கொடிகாம றோட்டின் கிழக்குப்பக்கமுள்ள 50 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலம் இதற்கு ஏற்றது. 

செட்டிய காட்டு வயல் (பழைய) நிலங்களை குப்பைக்காடாக மாற்ற பிரதேச சபைக்கு அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட அதிகாரம் உண்டு என்றால்  செய்கைக்குட்படாத பாரிய வயல்பரப்பை குளமாக மாற்ற உள்ள சட்டத்தடை எம்மாத்திரம். 

இரணைமடுவிலிருநது நீர் கொண்டுவருவதைவிட இத்தகைய பல திட்டங்கள் யாழ் குடாவுக்கு நன்மைபயக்கும். 

ஆசனத்தில் அக்கறை செலுத்தமட்டும் எமது அரசியல் வாதிகளுக்கு நன்கு தெரியும் அபிவிருத்தி???