ஆண் குழந்தையின் சடலம், தெஹிவளை கடலில் கரையொதிங்கியது.

வெள்ளத்தையில் கால்வாயில் விழுந்த 3 வயதான ஆண் குழந்தையின் சடலம், தெஹிவளை கடலில் கரையொதிங்கியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். 


வீட்டுக்கு பின்னாள் விளையாடிக்கொண்டிருந்த போதே, இந்தக் குழந்தை, கால்வாய்க்குள் தவறிவிழுந்துவிட்டது. பிரதேசவாசிகளும், பொலிஸாரும் இணைந்து கடுமையாக முயற்சிசெய்தபோதும் அக்குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என்றும், அக்குழந்தை கால்வாய்நீரில் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்ட நிலையிலே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.