யாழில் களைகட்டும் சவுக்கு விற்பனை

நாளை மறுதினம் நத்தார் பண்டிகையையொட்டி யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிறிஸ்மஸ் மரமாக வீடுகளில் நாட்டப்படும் சவுக்கு மரத்தின் விற்பனை களைகட்டியது.

வன்னி மற்றும் மணற்காடு போன்ற பகுதிகளில் இருந்து வெட்டி வரப்படும் சவுக்கு மரங்கள் யாழ்.கண்டி பிரதான வீதி, யாழ்.கன்னியர் மடம் வீதி, யாழ்.கஸ்தூரியார் வீதி, குருநகர், இணுவில் போன்ற பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதைக் காணக் கூடியதாகவுள்ளது.

தரத்திற்கேற்ப சவுக்கு மரங்கள் 50 ரூபா விற்பனை முதல் 250 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டன.

இதேவேளை நேற்றும் இன்றும் கிறிஸ்மஸ் மரத்தின் விற்பனை சூடுபிடித்திருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.