டொக்டர் பெடியலும் பெட்டைகளும் றோட்டில நிக்கிற நிலை வந்திட்டுதோ!!

டொக்ரருக்குப் படிச்சுப் பாஸ்பண்ணிய பிள்ளைகள் றோட்டில கிடக்கிறத பாக்க கவலையாத்தான் இருக்கு. இவை ஏன் இப்படி றோட்டில இருக்கினம் என்டு கேட்டால் தனியார் மருத்துவக் கல்லுாரி ஓப்பன் பண்ணுறதுக்கு எதிராத்தான் என்டு சொல்லுகினம். 

ஆனால் இவ்வளவு காலமும் டொக்டருக்குப் படிச்சு டொக்ரர் ஆகினவங்கள் எங்க போட்டாங்கள் என்டுதான் தேடிக்கொண்டு இருக்கிறன்.

இப்ப ஓரிரண்டு வருசத்துக்கு முந்தி யாழ்ப்பாண போதனாவைத்தியசாலையில ஏற்பட்ட கெடுபிடிகள், நோயாளர்களைப் பார்வையிடச் செல்பவர்களுக்கு ஏற்பட்ட துன்பியல் நிகழ்வுகள் சொல்லி மாளாது. ஆசுப்பத்திரி வாசலில அவிட்டு விட்ட அல்சேசியன் நாய்கள் போல நின்ட பாதுகாப்பு ஊழியர்கள் செய்த திருவிளையாடல்கள் எண்ணிலடங்காதவை. அந்த அல்சேசியன் நாய் ஒன்டிடம் நானும் கடி வாங்கப் பாத்தன். ஆனால் அந்த நாய்களை வளர்த்து கட்டி வைச்சிருந்த ஆசுப்பத்திரில எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் இருந்ததால கடிபடாமல் தப்பித்துட்டன். இல்லாட்டி நாயும் நானும் கடிபிடிபட்டு பொலிஸ்ரேசன் வரைக்கும் போயிருப்பம்.

இவங்கள் ஏன் இப்புடிக் கடிநாய்களை வளர்க்கிறாங்கள். அதுவும் ஏலாமல் வாறதுகள், வருத்தத்தில இருக்கிறவைகளை பாக்க சோகத்தோட வாறதுகளை இப்படி நாய்களை வைச்சு வெருட்டுறாங்கள் என்டு ஆராஞ்சு பாத்தால் ஒரு பேரதிர்ச்சியான விசயம் வெளி வந்திச்சு.

அதாவது இப்படியான நாய்களை வெச்சு வெருட்டி நோயாளர்களில பணக்காரங்களா ஓரளவு வசதி படைச்சவங்களா உள்ளவங்கள் நாய்களிட உவத்திரம் தாங்காமல் யாழ்ப்பாணத்தில இருக்கிற தனியார் நாத்தன் வைத்தியசாலைக்கு அனுப்பத்தான் இப்படி திட்டம் போட்டு செய்யிறாங்கள் என்டு உள்வீட்டுத் தகவல்கள் வந்திச்சு....

இதுகளை நினைச்சு சரியான ரென்சனாத்தான் இருந்திச்சு. அப்பாவிகள் ரென்சன் பட்டு என்ன செய்யிறது. பிறசரும் சலரோகமும் வாறதுதான் மிச்சம். அதால பேசாமல் இருந்திட்டன்.

அரசாங்க காசில படிச்சுப் போட்டு அரசாங்க வைத்தியசாலையில வேலை செய்து கொண்டு தனியார் வைத்தியசாலையிலும் வேலை செய்யிறது தவறில்ல. காரணம் எல்லாரும் உழைக்கத்தான் வேணும். பணக்காரன் தன்ர வசதிக்கு தனியார் வைத்தியசாலைக்கு போவான். அவனுக்கு சேவை செய்து காசு வாங்கிறதில எந்தவித தப்பும்இல்ல. ஆனால் அவனுக்கு முகம் மலர்ந்து செய்யிறது போல அப்பாவிச் சனத்துக்கும் அரசாங்க ஆசுப்பத்திரியில செய்யலாம்தானே..

.

மாணவர்களான நீங்கள் வைத்தியர்களாக வந்தவுடன் உங்களுக்குள்ளும் ஏராளமான குத்து வெட்டுக்கள் வருவதாகச் சொல்லுறாங்கள். உங்களை விட சீனியர்கள் உங்களுக்கான மரியாதை தராமல் உங்களிட திறமைகளைக் கண்டு பொறாமைப்பட்டு பல ஆய்க்கினைகள் தாறாதாகவும் கேள்வி... அதாலதான் நீங்கள் பல இடங்களுக்கும் ஓடுறதாயும் கதைக்கிறாங்கள்...

வெளிநாடுகளுக்குப் போய் உழைச்சு சம்பாதிக்கிற வசதி இருந்தும் எத்தனையோ உணர்வுபுர்வமான வைத்தியர்கள் எங்கட மக்களுக்கு சேவை செய்திருக்கிறாங்கள். அவங்களை பூப்போட்டு கும்பிட வேணும். இப்பவும் கன டொக்டர் பெடியல் பெட்டைகள் எங்கட மக்களுக்கு சேவை செய்யிறதுக்கா இங்கயே நிக்கிறாங்கள்.

பல சாதனைகளும் செய்து கொண்டு இருக்கிறாங்கள்.

ஆனால் எங்கட யாழ்ப்பாணத்துப் பல்கலைக்கழகத்தில படிச்சு டொக்டர் ஆகிறவங்களில 35 வீதமான ஆக்கள் தான் இப்படியான உணர்வுடன் இருக்கிறாங்கள். மற்றவங்கள் உணர்வு இல்லாதவங்களாக வெளியேறுறாங்கள் என்டு ஒரு முக்கியமான ஆள் எனக்குச் சொல்லிக் கவலைப்பட்டார்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இப்ப இருக்கிற நிலையை எண்ணி மனம் சந்தோசமா இருக்குது. அதே உடுப்போட இருக்கிற பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இப்ப என்னமாதிரி சனத்தோட பழகுறாங்கள். ஆசுப்பத்திரி வாட்டுகள் என்னமாதிரி துப்பரவா இருக்குது. டொக்டர்மார் என்னமாதிரி முகமலர்ச்சியோட வேலை செய்யிறாங்கள்.... ஏதோ வெளிநடாட்டு ஆசுப்பத்திரியில இருக்குறமாதிரி இருந்திச்சு.... எல்லாத்துக்கும் தலைமைதான் காரணம்... தலை செரியா இருந்தால் எல்லாம் சரியா இருக்கும்.

இதே போல் ஏனைய இடங்களிலும் வைத்தியசாலைகளினது தரமும் வைத்தியர்களினதும் மனநிலையும் மாற வேணும். அதுக்குப் பிறகு நீங்கள் றோட்டில இப்புடி நிப்பீங்களோ!! உங்களைத் தோளில துாக்கி வைச்சுக் கொண்டு ஆயிரக்கணக்கா சனம் உங்களோட நிக்கும்... இல்லாட்டி மருத்துவக் கல்லுாரி வந்தால் டொக்டர்மார் கன பேர் வருவாங்கள்.. அப்ப போட்டி உருவாகும்.... அப்ப வடிவா எங்களை கவனிப்பாங்கள்... என்டு சனம் நினைக்கும்தானே!!!

உங்களை தங்களின் கடவுள்களாக நினைத்தே நோயாளிகள் உங்களிடம் வாறாங்கள் என்பது உங்களுக்கே தெரிஞ்சிரு்ககும். நீங்களும் சின்னப்பிள்ளைகளா இருந்து அம்மா அப்பாவோட வைத்தியசாலைக்கு போய் மருந்து எடுத்திருப்பீங்கள்தானே!! அப்ப என்ன உணர்வு உங்களுக்கு இருந்தது.... ஆகவே எங்கட சனத்துக்கு மனத்திருப்தியா மனச்சாட்சிப்படி வேலை செய்துபாருங்கள்... நீங்கள் உயர்ந்த இடத்தில் வைத்து கௌரவிக்கப்படுவீர்ககள்.

உண்மையைச் சொன்னன்..... யாரும் கோவிக்காதையுங்கோ!!

நன்றி 

முகப்புத்தகம்