மீசாலையில் கடையை உடைத்த கள்வன் பொலிசாரிடம் கையும் மெய்யுமாகப் பிடிபட்டான்

மீசாலை, புத்தூர் சந்தியில் அமைந்துள்ள கடையொன்றை உடைத்துக் கொண்டிருந்த சந்தேகநபரை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சாவகச்சேரி பொலிஸார் மடக்கிப் பிடித்தனர்.

இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை  அதிகாலை 12.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

கடையின் முன்பக்க கதவுகளை உடைத்து உள்ளே செல்ல முயற்சித்தபோதே சந்தேகநபரை, பொலிஸார் மடக்கிப் பிடித்தனர்.

சந்தேகநபர், இதற்கு முன்னரும் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபட்டு, கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.