யாழில் பனையிலிருந்து தவறிவிழுந்த குடும்பஸ்தர் பரிதாபமாக பலி!

யாழ்ப்பாணம் உயரப்புலம் இளவாலை பகுதியில் பனையில் இருந்து தவறி விழுந்த குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த அம்பலவாணர் சிவகுமார் (43) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 17 ஆம் திகதி இளவாலை பகுதியில் உள்ள பனைமரத்தில் கள்ளு சீவுவதறகாக குறித்த குடும்பஸ்தர் மரம் ஏறியுள்ளார்.

பனை மரத்தின் வட்டுக்குள் இருந்து கள்ளு சீவிக் கொண்டு இருந்தபோது கால் சறுக்கி பனை மரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.

மயக்கமடைந்த நிலையில் உடனடியாக அவர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மதியம் குறித்த குடும்பஸ்தர் உயர்ரிழந்துள்ளார்.

மேலும் அவரது இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *