அரசாங்கத்தின் அறிவுறுத்தலை பின்பற்றாத மக்கள்

நாடு முழுவதும் அமுல்லில் இருந்த ஊரடங்கு சட்டமானது இன்று காலை ஆறு மணி முதல் பகல் இரண்டு மணிவரை தளர்த்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் கிளிநொச்சி நகரில் வழமைக்கு மாறாக அதிகளவில் மக்கள் ஒன்று கூடியிருந்தனர்.

கடந்த 01-04-2020 அன்று பிற்பகல் 2 மணிக்கு அமுலுக்கு வந்த ஊரடங்கு இன்று தளர்த்தப்பட்ட போது தங்களது அத்தியாவசி தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக நகரில் அதிகளவு மக்கள் திரண்டிருந்தனர்.

வியாபார நிலையங்கள், சந்தை, வங்கிகள்,சதொச விற்பனை நிலையம் போன்றன மக்களால் நிறைந்திருந்தன.

அதிகளவு மக்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் நகரின் மையப்பகுதியில் ஒன்று திரண்டமையால் அங்கு போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.

இதேவேளை நாட்டில் கொரோனா பரவலை தடுப்பதற்காக சமூகவிலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் ஊடரங்கு உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *