29. 03. 2020 இன்றைய இராசிப்பலன்

மேஷம்

இன்று வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வற்றாலும் லாபங்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடைப்பட்ட உயர்வுகளைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். திறமைக் கேற்ற பாராட்டுதல்களால் மனநிம்மதி உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

ரிஷபம்

இன்று புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறுவார்கள். அரசியல்வாதிகளின் நோக்கங்கள் யாவும் நிறைவேறும். உங்களின் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் உயரும். மக்களின் ஆதரவுகள் உற்சாகத்தை ஏற்படுத்தும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மிதுனம்

இன்று உங்கள் திறமைக்கு தீனிபோட்டதுபோல் வாய்ப்புகள் அமையும். கடன்கள் அனைத்தும் பைசலாகும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்படுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கடகம்

இன்று உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பலமும் வலிமையும்கூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய பாதிப்புகள் இல்லாமல் உடனே சரியாகிவிடும். குடும்பத்தில் உள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பதால் மருத்துவச்செலவுகள் குறையும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

சிம்மம்

இன்று தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலப்பலன்களும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். நீங்கள் நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும். உணவு விஷயத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

கன்னி

இன்று குடும்ப வாழ்வில் குதூகலமும், பூரிப்பும் உண்டாகும். கணவன்-மனைவியிடையே அன்யோன்யமான உறவு இருக்கும். புத்திரர்களால் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தாராள தனவரவுகளால் இதுவரை தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

துலாம்

இன்று திருமண சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். உடன்பிறப்புகள் தக்கசமயத்தில் உதவுவார்கள். வீடு, மனை, வண்டி, வாகன யோகங்கள் அமையும். உற்றார்-உறவினர்கள் பிரச்சினைகளை மறந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

விருச்சிகம்

இன்று கொடுக்கல்-வாங்கல் திருப்தி கரமாக அமையும். கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் நல்ல லாபம் அமைந்து பொருளாதாரநிலை உயரும். கொடுத்த வாக்குறுதிகளை சரியான நேரத்தில் காப்பாற்ற முடியும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

தனுசு

இன்று பெரிய தொகைகளைக்கூட எளிதாக ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். பெரிய மனிதர்களின் ஆதரவைப் பெறமுடியும். நீண்ட நாட்களாக இழுபறி நிலையிலிருந்த வம்பு வழக்குகளும் ஒரு முடிவுக்கு வரும். மொத்தத்தில் சந்தோஷமான நாள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

மகரம்

இன்று தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சில போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபத்தைப் பெறமுடியும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று தொழிலை மேன்மையாக அபிவிருத்தி செய்யமுடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபத்தையும், வெற்றியையும் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கும்பம்

இன்று வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பும் நல்ல மேன்மையை ஏற்படுத்தும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடு உங்களுக்கு மேலும் உற்சாகத்தைத் தரும். தொழிலாளர்கள் அனுகூலமாக செயல்படுவதால் நினைத்த காரியங்களை நிறைவேற்றிக்கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மீனம்

இன்று தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சாதகப்பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அனுகூலமானபலனை அடைவார்கள். தடைப்பட்ட பதவிகளும் கிடைக்கப்பெற்று கௌரவமானநிலைகள் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *