மக்களுக்காக மேலும் சில நடவடிக்கைகளை எடுத்துள்ள இலங்கை அரசாங்கம்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசாங்கம் வழங்கியுள்ளதுடன், மக்களுக்காக மீண்டும் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அரச அலுவலர்களுக்கான வருடாந்த விழா முற்பணத்தை வழங்கவும், 23 இலட்சம் சமுர்த்திக் குடும்பங்களுக்கு ஆரம்ப கொடுப்பனவாக 5000 ரூபாவையும், அங்கவீனர் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளாத, காத்திருப்பு பட்டியலில் உள்ள அங்கவீனர்களுக்கும் ஏற்புடைய கொடுப்பனவை வழங்கவும் அதிமேதகு ஜனாதிபதி மற்றும் பிரதம அமைச்சரின் அனுமதி கிடைத்துள்ளது.

அத்துடன் ஓய்வூதிய, முதியோர் கொடுப்பனவுகளைப் பெறுவோருக்கு ஏற்புடைய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பிரதம அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவின் அனுமதியின் கீழ் ஓய்வுபெற்றோர் மற்றும் முதியோரின் வீடுகளுக்கே அனுப்பி வைக்கும் வேலைத்திட்டமொன்று எதிர்வரும் 2020.04.03ஆம் திகதி முதல் செயற்படுத்தப்படவுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்தினம் (2020.03.28) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கும் செயலணியின் பங்களிப்பு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *