தாவடியில் கிருமித் தொற்று நீக்கல் நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் தாவடிக் கிராமத்தில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் பணியை சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.

கொழும்பிலிருந்து எடுத்துவரப்பட்ட புதிய இயந்திரத் தொகுதியால் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி முன்னெடுக்கப்படுகிறது.

இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் வசிக்கும் வீடு உள்ள தாவடிக் கிராமத்தில் வசிப்போர் வீடுகளில் வசிப்போர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *