27. 03. 2020 இன்றைய இராசிப்பலன்

மேஷம்

இன்று உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற இடமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். கூடுதல் பொறுப்புகள் ஏற்படுவதால் அதிக நேரம் உழைக்க வேண்டி வரும். உடல்நிலை சோர்வடையும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3

ரிஷபம்

இன்று எந்தப் பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியாமல் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். பிறர் செய்யும் குற்றங்குறைகளை நீங்கள் கண்டுபிடித்துக் கூறுவதாலும் உடனிருப்பவர்களிடம் வீண் பிரச்சினைகளும் வாக்குவாதங்களும் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6

மிதுனம்

இன்று எந்த காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை செய்ய நேரிடும். பெண்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமையற்ற நிலைகளால் நிம்மதி குறையும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நிலவும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6

கடகம்

இன்று பணவரவுகளில் பற்றாக்குறை நிலவுவதால் குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டியிருக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறாமல் மனசஞ்சலங்கள் உண்டாகும். உடல்நிலையில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7

சிம்மம்

இன்று உற்றார்-உறவினர்களின் ஆதரவுகளைப் பெறமுடியாமல் போகும். சிலருக்கு வீடு மாறக்கூடிய சூழ்நிலையும், பணிபுரியும் பெண்களுக்கு உடனிருப்பவர்களால் வீண்பிரச்சினைகள் ஏற்பட்டு வேலைப்பளு அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கன்னி

இன்று புகழ், பெருமை யாவும் மங்கும். உடனிருப்பவர்களே துரோகிகளாக மாறுவார்கள். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மட்டுமே மக்களின் ஆதரவைப் பெறமுடியும். மேடைப் பேச்சுகளில் சற்று கவனமுடன் செயல்படுவது மிகவும் உத்தமம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

துலாம்

இன்று புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. கலைஞர்கள் வரவேண்டிய படவாய்ப்புகள் தட்டிச்செல்லும். தனவரவில் தடைகள் உண்டாகி கடும்சோதனைகள் ஏற்படும். சம்பள பாக்கிகளும் இழுபறி நிலையில் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

விருச்சிகம்

இன்று வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலமான பலனை அடையமுடியாது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

தனுசு

இன்று எவ்வளவுதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் எதிர்பார்த்த பலன்களைப் பெறமுடியாது. தேவையற்ற பொழுதுபோக்குகளும் நண்பர்களின் சேர்க்கைகளும் வீண் பிரச்சினைகளை உண்டாக்கிவிடும் என்பதால் எதிலும் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

மகரம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். மனதில் அமைதியும், உற்சாகமும் பிறக்கும். மனைவி, பிள்ளைகளும் மகிழ்ச்சிகரமாக அமைவார்கள். தடைப் பட்ட சுபகாரிய முயற்சிகளை மேற்கொண்டால் தற்போது கைகூடும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

கும்பம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். பணம் பலவழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். தாராள மான தனவரவுகளால் குடும்பத்தேவைகள் அனைத்தும் கைகூடும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மீனம்

அசையும், அசையா சொத்துகள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்துச்செல்வது நல்லது. உத்தி யோக நிலையில் ஓரளவுக்கே உயர்வினை எதிர்பார்க்க முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் பணியில் திருப்திகரமான சூழ் நிலையை உண்டாக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *