இலங்கைக்குள் முதலாவது பயணத்தடை வடக்கு மக்களிற்கு! ஏ 9 வீதி மூடப்பட்டது

வடக்கின் ஐந்து மாவட்டங்களிற்கும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வந்த சுவிற்சர்லாந்து போதகர் மூலம் கொரோனா வைரஸ் பரவியதையடுத்து அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஜெப ஆராதனையின் மூலம் கொரோனா வைரஸ் தொற்றிற்கு இலக்கானவர்களை அடையாளம் காணுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் (24) ஊரடங்கு சட்டம் வடக்கில் நீக்கப்பட்டு, மீண்டும் மதியம் 2 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஊரடங்கு நீக்கப்பட்டாலும், வடக்கின் 5 மாவட்டங்களையும் சேர்ந்த மக்கள், தாங்கள் வாழும் மாவட்டங்களை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு பின்னர் ஓமந்தை, மற்றும் கனகராயன்குளம் பகுதியில் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், எ9 வீதி மூடப்பட்டுள்ளது.

பொலிசாரின் தற்காலிக அனுமதி பத்திரம் வைத்திருப்பவர்கள் மாத்திரம் குறித்த வீதியால் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதுடன் சோதனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *