கொரோனாவை விட மோசமான வைரஸ் ஒன்னு இருக்கு – மாஸ்டர் விழாவில் விஜய் சேதுபதி அசத்தல் பேச்சு !

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய் சேதுபதி கொரோனா வைரஸ் பற்றி பேசியுள்ளார்.

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள
‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ஆடியோ விழா நேற்று நடைபெற்றது. இதில் விஜய்யின் பேச்சை விட அதிகமாகக் கவனம் ஈர்க்கப்பட்டது நடிகர் விஜய் சேதுபதியின் பேச்சுதான்.

தாமதமாக வந்ததற்கு மன்னிப்புக் கேட்டுவிட்டுப் பேச்சைத் தொடங்கிய அவர் ‘இந்த படத்துல நான் தான் ஹீரோ. அது எப்படினா, விஜய்க்கு நான் வில்லன்னா, எனக்கு விஜய் வில்லன். அப்போ நான் தான ஹீரோ’ என சொல்ல அதை விஜய்யே ரசித்தார்.

பின்னர் தொடர்ந்து ‘கொரோனா வந்துடும்னு சொந்தக்காரங்களே தொட்டு பேச மறுக்குற நிலைமைல, பரவும்னு தெரிஞ்சும் கொரோனா வைரஸுக்கு மருத்துவம் பாக்குற அத்தனை பேரையும் நான் வணங்குறேன். கொரோனாவை விட பெரிய வைரஸ் ஒன்னு இருக்கு. அது இங்க ஒரு பேர்ல சுத்திகிட்டு இருக்கு. அந்த வைரஸால யாரும் பாதிக்கப்பட்டுடக் கூடாது.

மேல இருந்து எதுவும் வந்து காப்பாத்தாது.மனுஷனை மனுஷன் தான் காப்பாத்தனும். மதமோ சாதியோ யாரையும் காப்பாத்தாது. கடவுளையே காப்பாத்துறேன்னு சொல்லிட்டு இருக்குற நபர்கள்கிட்ட இருந்து தள்ளியே இருங்க. மனிதம் ஒன்றே மனிதனை காப்பாத்தும். கடவுள் நம்மை காப்பாத்தாது. மனுஷங்களை நேசிக்கிறேன்..கடவுளை தள்ளி வச்சி தான் பாக்குறேன்’ என சொல்லி அரங்கத்தில் இருந்த அனைவரின் பாராட்டுகளையும் அள்ளினார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *