மாஸ்டர் ஆடியோ விழாவில் விஜய்சேதுபதியின் கடனை திருப்பி கொடுத்த விஜய்

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ஆடியோ விழா நேற்று நடைபெற்ற நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் விஜய்சேதுபதியிடம் விஜய் பெற்ற கடனை நேற்று அவர் திருப்பி கொடுத்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு தினத்தில் தனது ரசிகர்களுக்கு கொடுப்பது போல் விஜய்க்கு விஜய்சேதுபதி முத்தம் கொடுத்தார். இதுகுறித்த புகைப்படம் உலக அளவில் டிரெண்ட் ஆனது என்பது தெரிந்ததே,

இந்த நிலையில் ‘வாங்கிய கடனையும் முத்தத்தையும் திருப்பி கொடுத்துவிட வேண்டும்’ என்று நேற்று நடைபெற்ற ‘மாஸ்டர்’ ஆடியோ விழாவில் தொகுப்பாளினி பாவனா, விஜய்யிடம் கூற, உடனே மேடையில் இருந்து கீழே இறங்கிய விஜய், விஜய்சேதுபதியை கட்டிப்பிடித்து அவருக்கு முத்தம் கொடுத்தார். இதனையடுத்து அரங்கில் எழுந்த கரகோஷம் விண்ணைப்பிளந்தது.
அதன்பின் விஜய், விஜய்சேதுபதி குறித்து பேசியபோது, ஒரு நடிகராக, ஒரு ஹீரோவாக ஜெயித்து விட்டால் அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்வது என்பது மிகப்பெரிய விஷயம். சின்ன சின்ன வேடங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்து இன்று மக்கள் செல்வனாக இருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இந்த படத்தில் வில்லனாக நடிப்பதை தவிர்த்து இருக்கலாம்.
அவருக்கு என ஒரு மார்க்கெட் இருக்கின்றது. ஆனால் அவர் ஏன் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டார் என்பதை அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ள விரும்பினேன். அதற்கு அவர் கூறிய பதில் ஒரு புன்னகையும் ‘உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்’ என்றும் கூறியதுதான்.
அதன்பின்னர் தான் எனக்கு தெரிந்தது. அவர் என்னுடைய பெயரில் மட்டும் இடம்கொடுக்கவில்லை, மனதிலும் இடம் கொடுத்து விட்டார் என்று, நன்றி நண்பர் விஜய்சேதுபதி’ என்று விஜய் பேசினார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *