யாழில் அழுகிய இறைச்சிக்கறி கொடுத்த ‘ஒமைக்ஸ்’ முதலாளி மருத்துவபீட மாணவனுக்கு அச்சுறுத்தல்!!

யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் இயங்கும் ஒமைக்ஸ் சாப்பாட்டுக் கடையில் அழுகிய இறைச்சிக்கறியை மருத்துவபீட மாணவனுக்கு கொத்துறொட்டிக்குள் போட்டுக் கொடுத்த சம்பவத்தை அந்த மாணவன் தனது முகப்புத்தகத்தில் வெளியிட்டிருந்தார். அதனையடுத்து குறித்த கடை முதலாளி அந்த மாணவனுக்கு அச்சுறுத்தல் விடுத்ததுடன் யாழ் பொலிஸ் நிலையத்தில் பொய் முறைப்பாடும் கொடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. அது தொடர்பாக அந்த மாணவன் தனது முகப்புத்தகத்தில் வெளியிட்ட கருத்த அப்படியே இங்கு தந்துள்ளோம்.

 

நாங்க_ஒண்டும்_உன்ன_மாதிரி #வன்னிக்_காட்டுல_இருந்து_வந்து_தொழில் #செய்யேல#நீ_யாழ்ப்பாணத்துக்கு_வருவாய்_தானே#பாப்பம்..இந்தக் Case ல வெல்லப் போறது நீயா நானா என்று பார்ப்போம்…” – நேற்று இரவு யாழ்.பொலிசார் என்னை அழைத்த பின்பு Omex hotel உரிமையாளரின் குமுறல் இதுதான்…
————————————————————————-
ஏய்யா யோவ்…. யாழ்.நகருக்குள்ள போதனா வைத்தியசாலைக்கு முன்னுக்கு கடை வச்சிருக்கிற நீ பழுதாப்போன சாப்பாட்ட விற்பனை செய்ததுக்கு எதிராத்தான் நான் முகநூல்ல போஸ்ட் போட்டன்…அதுக்கும் வன்னிக்கும் என்னடா சம்மந்தம்..?? ஏன் யாழ்ப்பாணத்தில இருக்கிறாக்கள் மட்டும் பழுதாப்போன உணவுகளைச் சாப்பிடுவாங்களா…?? ஏய்யா…யாழ்ப்பாணத்து உறவுகளும் உங்களுக்கு எதிராத்தான் நிக்கிறாங்க..அத புரிஞ்சு கொள்ளுங்க…அத விட்டுட்டு உந்த வெருட்டல்…ஆஹா….உதெல்லாம் சரிப்பட்டு வராது…
வன்னியில அப்பிடி எங்கடா காட்டக் கண்டீங்க…?? வன்னிக்காடு வன்னிக்காடு என்டுறீங்க…?? அது மட்டுமில்ல…நாங்க, யாழ்ப்பாணக்காரர் எல்லாமே ஒற்றுமையா தானேடா இருக்கிறம்…பிறகேன்டா இப்பிடி பிரிக்கிறீங்க….
சரி நான் விசயத்துக்கு வாறன்…
#Omex_hotel இனால் வழங்கப்பட்ட பழுதடைந்த உணவுப் பொதிக்கு எதிராக அந்த உணவகத்தின் பகுதி நேர மேற்பார்வையாளர் மற்றும் உணவுத் தயாரிப்பாளர்களுடன் நடைபெற்ற விவாதத்தின் பின்னர் அவர்களின் முறையற்ற செயல் பற்றி எனது முகநூல்க் கணக்கினூடாக நேற்று முன்தினம் பதிவொன்றை இட்டிருந்தேன்..அப்பதிவு பலரால் பகிரப்பட்டு அவ் உணவகத்திற்கெதிரான மேலும் பல கருத்திடல்கள்(Comments) முன்வைக்கப்பட்டதையடுத்து நேற்றைய தினம் 2020:03:14) உணவக உரிமையாளர் எனக்குத் தொலைபேசி அழைப்பெடுத்து அப்பதிவை நீக்குமாறு வற்புறுத்தினார்..தனது உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட தவறான ஒரு செயலை அவர் நியாயப்படுத்துவதிலேயே குறியாக இருந்தார்.. நான் பதிவை இதுவரை நீக்கவில்லை…
இதனையடுத்து அவர் தொடர்ச்சியாக மேலும் மேலும் அழைப்பெடுத்து நான் பதிலளிக்காதபட்சத்தில் நேற்றையதினம் இரவு 8.15 மணியளவில் யாழ்.பொலிஸ் நிலையத்திலிருந்து எனக்கு மேற்கொள்ளப்பட்ட அழைப்பில் இன்று(2020:03:15) காலை 9.00 மணிக்கு யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்..எதற்காக என வினவிய போது #Omex_hotel விவகாரம் தொடர்பில் கதைக்க வேண்டுமென்று கூறினர்..ஆகவே நான் “#Omex_hotel_உரிமையாளர்_புகாரளித்தாரா??” என்று கேட்டேன் .. அதற்கு அந்தப் பொலிஸ் அதிகாரி #இல்லை ..#அவர்கள்_புகாரளிக்கவில்லை..#கொஞ்சம்_கதைக்க_வேண்டும் ” என்றார்..
என்ன பிரச்சினை வந்தாலும் முகங்கொடுக்கலாம்..சிறை கூடச் செல்லலாம் என்ற உறுதியான முடிவெடுத்த பின்னரே இப்பதிவை இடுகின்றேன்…
எனக்கு ஒரு விடயம் விளங்கவில்லை..புகாரளிக்கப்படாமல் எவ்வாறு ஒரு தனிநபரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்க முடியும்..?? அவ்வாறு முறை உண்டா எனத் தெரியாது…தெரிந்தவர்கள் Comments இல் குறிப்பிடுங்கள்..🙏

இது தொடர்பாக நான் நேற்றிரவே தருமபுரம் காவல்த்துறையிடமும் யாழ்.மாவட்ட சுகாதாரப் பரிசோதக அதிகாரிகளிடமும் கலந்துரையாடினேன்…

அதன் பின்னர் என்னைத் தொடர்பு கொண்ட உணவக உரிமையாளர் மேலே நான் குறிப்பிட்டது போல மிரட்டல்ப் பாணியில் தனது வாதத்தை முன்வைத்தார்…

இங்க பாருங்க மிஸ்டர்..உங்களுக்கு Local ஆ சொல்றன்..உங்கட #Omex_hotel க்கு எதிராக வந்த சில கருத்திடல்களையும் இங்க பதிவிடுகிறேன்…நீங்கள் ஒரு வருடம் இரு வருடம் அல்ல…பல வருடங்களாக இதைத்தான் செய்து வருகிறீர்கள்…
#உறவுகளே#இவர்களுக்குத்_தண்டணை_வழங்க_வேண்டியது_பொது_மக்களாகிய_எங்களின் #கடமையே..
..ஒரு கை தட்டி ஓசை வரப் போவதில்லை… #பகிருங்கள்… இதுபோல் இனி யாருக்கும் நடக்கக் கூடாது…நடக்க விடக் கூடாது….
#ஆதரவுக்கு_நன்றி

KS Jeyakirushna

குறித்த கடையில் இருந்த மனேஜர் என்பவன் மாணவனின் பதிவுக்கு கொடுத்திருந்த விடையும் அதற்கு மாணவன் கொடுத்த பதிலடியும் கீழே தரப்பட்டுள்ளது.

Image may contain: text

இவன்தான் குறித்த ஒமெக்ஸ் கடையில் முதலாளிக்கு அடுத்ததான பிரதான ஆள் என முகப்புத்தகத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Image may contain: 1 person

 

 

No photo description available.

 

இது குறித்த ஒமெக்ஸ் கடை தொடர்பாக பேஸ்புக்கில் வெளிவந்த கண்டனங்கள் தரப்பட்டுள்ளன….

Image may contain: 2 people, textImage may contain: textImage may contain: 1 person, textImage may contain: 2 people, possible text that says 'AMD Sabarajah Suyanthan உண்மை தான் இவங்கள் தான் ஒருமுறை பார்த்திரிக்கையில் வந்தது ஒரு பார்சலுக்க இரும்பு ஆணி கிடந்தது மற்றும் அட்ட, 19h Love Reply KS Jeyakirushna Sabarajah Suyanthan...'Image may contain: one or more people and textImage may contain: 1 person, possible text that says 'Lavansan Balan Already enakum nadantheruku bro. Antha kadai pakkame porathella eppa 2h Love Reply 2 KS Jeyakirushna Lavansan Balan'Image may contain: 2 people, textImage may contain: 2 people, textImage may contain: 1 person, possible text that says 'Jasika Nathan o enga ore palasuthan sappadugal Reply 10h Love KS Jeyakirushna Jasika Nathan mmm...'

குறிப்பு – ஒமெக்ஸ் சாப்பாட்டுக்கடை பொறுப்பாளர்கள் இது தொடர்பாக ஏதாவது விளக்கம் அல்லது தகவல் தர விரும்பினால் எமது newjaffna@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களது விளக்கத்தை அனுப்பலாம். நிச்சயம் நாம் அவற்றை பிரசுரிப்போம்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *