கரப்பான் பூச்சி உணவு!! யாழ் ரஹ்மான் ஹோட்டல் உட்பட பல உணவகங்கள் சீல் வைக்கப்பட்டன!!

இன்றையதினம் 28.02.2020 வெள்ளிக்கிழமை யாழ் உயர் அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய யாழில் உள்ள உணவகங்கள் மீது பொதுச்சுகாதாரப் பரிசோதகர் சஞ்சீவன் மேற் கொண்ட அதிரடி நடவடிக்கையால் உணவங்களில் மேற் கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பின்னர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட 06 வழக்குகளிற்கு 285,000/= தண்டத்துடன் அனைத்திற்கும் சீல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

கொழும்புத்துறை, யாழ்நகர் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வெதுப்பகம், உணவகங்களிற்கு எதிராக பொதுச்சுகாதாரப் பரிசோதகர் சஞ்சீவனால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதில் கே. கே.எஸ் வீதியில் அமைந்துள்ள ரஹ்மான் ஹோட்டல், ராசிக் முஸ்லிம் ஹோட்டல் மற்றும் கொழும்புத்துறையில் அமைந்துள்ள இன்ஷா முஸ்லீம் ஹோட்டல், தமீம் முஸ்லீம் ஹோட்டல், குமார் பேக்கரி என்பன அடங்கும்.

இதில் ரஹ்மான் ஹோட்டலிற்கு 09 குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு 135,000/= தண்டத்துடன் சீல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. வெதுப்பகத்திற்கு 06 குற்றச்சாட்டுகறிற்கு 30,000/=, ஏனைய உணவகங்களிற்கு 07 குற்றச்சாட்டுகளிற்கு 35,000/=, 06 குற்றச்சாட்டுகளிற்கு 30,000/=, 05 குற்றச்சாட்டுகளிற்கு 25,000/=, 06 குற்றச்சாட்டுகளிற்கு 30,000/= என்றவாறு தண்டம் அறவிடப்பட்டதுடன் அனைத்திற்கும் சுகாதார குறைபாடுகள் சீர்செய்யும் வரை சீல் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து இன்றையதினம் அனைத்தும் சீல் வைத்து மூடப்பட்டது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *