யாழ் பிரதேச செயலரின் முன்மாதிரியான நடவடிக்கை! பலரும் பாராட்டு

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் விண்ணப்பபடிவங்களை முழுமை செய்ய முடியாது தடுமாறுபவர்களுக்கு உதவும் முகமாக இன்றுமுதல் பட்டதாரி பயிலுநர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

யாழ் பிரதேச செயலகத்தில் பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை பெற வருபவர்கள் அந்த விண்ணப்பப்படிவங்களை நிரப்ப முடியாது தடுமாறுகின்றனர்.

இவ் வேளைகளில் அங்கு தரகர்கள் போன்று செயற்படும் சில நபர்கள் விண்ணப்ப படிவங்களை நிரப்பி கொடுப்பதற்கு 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையில் அறவீடு செய்து வருகின்றனர்.

இதனை கண்டறிந்த பிரதேச செயலர் எஸ். சுதர்சன், தரகர்கள் போன்று செயற்பட்ட நபர்களை கடுமையாக எச்சரித்ததுடன் இனி பிரதேச செயலகத்திற்குள் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டால் பொலிஸாரிடம் கையளிக்கப்படுவீர்கள் என எச்சரித்துள்ளார்.

அத்துடன் இன்று முதல் பிரதேச செயலகத்திற்கு வரும் மக்களுக்கு உதவி செய்வதற்காக பட்டதாரி பயிலுநர்கள் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

அங்கு சேவைகளை பெறவரும் மக்களுக்கு விண்ணப்ப படிவங்களை நிரப்பி கொடுப்பது , மற்றும் பிரதேச செயலக சேவைகளை பெற வருபவர்களுக்கும் அவர்கள் உதவிகளை செய்கின்றார்கள்.

இந்த நிலையில் பிரதேச செயலரின் இம் முன்மாதிரியான செயற்பாட்டை பலரும் பாராட்டியதுடன் , ஏனைய பிரதேச செயலர்களும் இதனை நடைமுறைப்படுத்தினால் சேவைகளை பெற செல்லும் மக்கள் சிரமமின்றி தங்களுடைய சேவைகளை பெற்றுக்கொள்வதுடன் தரகர்களிடம் பணத்தை பறிகொடுக்கத் வேண்டிய தேவை ஏற்படாது எனவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *