யாழ். பல்கலைக்கழகத்திற்கு இழுக்கு வந்தால்…. ஆவாக் குழுவின் மிரட்டல்

பகிடிவதை குற்றசாட்டில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்நுழைய இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட மாணவனின் வீட்டின் மீது தாமே தாக்குதலை மேற்கொண்டதாக ஆவா குழு, தமது முகநூல் ஊடாக உரிமை கோரியுள்ளது.

ஆனைக்கோட்டை மூத்த விநாயகர் கோவிலடியில் உள்ள குறித்த மாணவனின் வீட்டுக்குள் நேற்றிரவு நுழைந்த நால்வர், மாணவனை அழைத்துள்ளனர். அவர் அங்கில்லாத நிலையில் அங்கிருந்த உடமைகள் மீது தாக்குதல் நடத்தி உடைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்..

இந்நிலையில் இன்றைய தினம் ஆவா குழு என தம்மை அடையாளப்படுத்தி முகநூல்களில் செயற்பட்டு வரும் இளைஞர்கள் சிலர் தமது முகநூல்களில் “தமிழர்கள் அடையாளமாக காணப்படும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் அனைத்து செயற்பாடுகளுக்கும் எதிராக எமது நடவடிக்கைகள் இடம்பெறும். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற மாணவ பெண்களுக்கு எதிராக ராக்கிங் மேற்கொள்ளும் நபர் மீது நேற்று தாக்குதல் நடைபெற்றது.

ராக்கிங் என்ற பெயரில் மாணவர்களுக்கு வேதனை ஏற்படுத்தும் பட்சத்தில் இது போன்ற தண்டனை தொடரும் இனிவரும் காலங்களில் என பதிவிட்டுள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *