திடீரென சிறைக்கு சென்ற கோட்டாபய – தமிழ்க் கைதிகளோடு சந்திப்பு – விடுதலை சாத்தியமா…?

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நேரில் சென்று பார்வையிட்டார்.

கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு இன்று மாலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன் அறிவித்தலின்றி கண்காணிப்புக்காகச் சென்றிருந்தார். அங்குள்ள நிலமைகளை ஜனாதிபதி ஆராய்ந்து வருகிறார்.

அங்கு தண்டனை பெற்ற மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அவர் சந்தித்தார்.

ஜனாதிபதியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் சென்றிருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில் தண்டனை பெற்று சிறையிலுள்ள முன்னாள் போராளியும் அரசியல் கைதியுமான ஆனந்தசுதாகரனையும் ஜனாதிபதி சந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

වැලිකඩ නව මැගසින් බන්ධනාගාරයේ වර්තමාන තත්වය සොයා බැලීමට අද එහි හදිසි චාරිකාවක නිරතවූයෙමි. එහි බළධාරීන් සහ රැඳවියන් කණ්ඩායමකටද කතාබහක යෙදෙන්නටද අවස්ථාව උදා විය. එහි තත්වය සොයා බලන්නට කමිටුවක් පත් කරන්නට පොරොන්දු වුයෙමි.

Posted by Gotabaya Rajapaksa on Isnin, 10 Februari 2020


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *