காங்கேசன்துறை கடற்கரையில் சிக்கிய பெரும் தொகை பொருள்!

யாழ். காங்கேசன்துறை கடற்பிராந்தியத்தில் சுமார் 157 கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை கடற்பிராந்தியத்தின் பல பகுதிகளில் நேற்று கடற்படையினர் சுற்றிவளைப்பை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது கரைப்பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 43 கிலோ 400 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

பின்னர் குறித்த பகுதியை அண்மித்த 3 இடங்களில் மேற்கொண்ட சோதனையின்போது 113 கிலோ 700 கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம், நேற்றைய தினத்தில் மட்டும் 157 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டடுள்ளது,.இதேவேளை கடந்த 35 நாட்களுக்குள் 988 கிலோகிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், அதில் 700 கிலோகிராம் கேரள கஞ்சா வட கடற்பிராந்தியத்திலேயே கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *