100,000 வேலைவாய்ப்பு! விண்ணப்படிவமும், முழு விபரமும்! அரசாங்கத்தின் அறிவிப்பு!

பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தினால், ஒரு லட்சம் பயிலுனர் பதவிகளிற்கான முதலாம் கட்ட ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்படிவங்கள் இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ளது.

குறித்த விண்ணப்பபடிவங்களை பிரதேச செயலகங்களில பெற்றுகொள்ள முடியும் என்றும், படிவங்களை பூர்த்தி செய்து கிராம சேவகரிடம் 15/02/2020 முன் கையளிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

1. தகைமை

க.பொ. சாதாரண தரம் சித்திக்கான மட்டத்தை விட குறைந்த மட்ட கல்வித் தகமை உடையவராக இருத்தல் (கல்வித் தகமை குறைந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்)

விண்ணப்பம் கோரப்படும் இறுதி நாளில் 18 வயதுக்குக் குறையாமலும் 40 வயதுக்கு மேற்படாமலும் இருத்தல் (35 வயதுக்கு குறைந்த விண்ணப்பதாரர்களுக்கு முதலாவது முன்னுரிமை வழங்கப்படும் என்பதுடன் 35 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த முக்கியத்துவம்)

சமுர்த்தி நிவாரணம் பெறுவதற்கு தகமை பெற்ற ஆனால் சமுர்த்தி நிவாரணம் பெறாத குடும்பத்தில் வேலை வாய்ப்பு இல்லாத உறுப்பினர்களாக இருத்தல் அல்லது சமுர்த்தி நிவாரணம் பெற்ற குடும்பத்தின் வேலைவாய்ப்பு இல்லாத உறுப்பினராக இருத்தல் அல்லது

நோயாளியான பெற்றோர் அல்லது ஊனமுற்ற உறுப்பினர்கள் உள்ள குடும்பத்தில் வேலை வாய்ப்பு இல்லாத உறுப்பினராக இருத்தல்

விண்ணப்பிக்கும் பிரதேசத்தில் வசிப்பவராக இருத்தல்

2. பயிற்சிக்காக தெரிவு செய்தல்

2.1 ஒரு குடும்பத்தில் உள்ள மேற்படி இலக்கம் 1ல் குறித்த தகமையை பூர்த்தி செய்த ஒரு விண்ணப்பதாரி பற்றி மட்டும் பரிசீலனை செய்யப்படும்.

2.2 விண்ணப்பதாரி வசிக்கும் கிராமத்துக்கு அண்மையில் உள்ள பிரதேசங்களில் உள்ள வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்கள் மற்றும் விண்ணப்பதாரி கோரிய பயிற்சிக்களம் ஆகிய அனைத்தும் கவனத்திற் கொண்டு ஏற்ற தொழிற்பயிற்சி தீர்மானிக்கப்படும்.

2.3 விண்ணப்பதாரி வசிக்கும் பிரதேசத்தில் உள்ள பிரதேசங்களுள் அல்லது அண்மையிலுள்ள பயிற்சி நிலையங்களில் இந்த பயிற்சி வழங்கப்படும்.

2.4 ஏற்ற பயிற்சியின் பின்னர் வசிக்கும் பிரதேசத்தில் அல்லது அண்மையிலுள்ள பிரதேசங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

3. சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள்

ஆறு மாதங்கள் தொடரும் பயிற்சி காலத்தில் மாதமொன்றுக்கு 22,500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த பின்னர் பயிற்சி பெற்ற தொழிற்களத்திற்கு ஏற்ப நிரந்தரமாக வசிக்கும் பிரதேசத்துக்குள் அரசாங்கம் அனுமதித்த ஆரம்ப தொழில் நுட்பம் சாராத (பி.எல் 1) சம்பளம் மற்றும் கொடுப்பனவு உடைய அரசாங்க நிரந்தர பதவிக்கான நியமனம் பெறும் வாய்ப்பு பயிற்சி பயனாளிக்கு கிடைக்கும்.

10 வருடங்கள் திருப்தியான பரந்த சேவை காலத்தைப் பூர்த்தி செய்த பின்னர் ஓய்வூதிய உரிமை.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *