யாழில் ஒட்டு மொத்த மக்களையும் ஒன்று சேர்த்த கோலாகலமான பட்டத்திருவிழா..!

தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் பட்ட போட்டி நடத்தப்பட்டது. இம்முறை பல்லாயிரக் கணக்கான மக்கள் பங்கேற்று பட்டப் போட்டிகளை பார்த்து மகிழ்ந்தனர்.

போட்டியானது யாழ் காங்கேசன்துறை கடற்கரையில் கலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது.

பட்டம் ஏற்றும் போட்டிக்கு இந்த வருடம் சுமார் 60 மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கு பற்றியிருந்தனர்.

இந்தப் போட்டியில் வித விதமான முறைகளில் வடிவமைக்கப்பட்ட பட்டங்கள் ஏற்றப்பட்டன. அதில் பறக்கும் இசைக்கச்சேரி பட்டம் முதலிடம் பிடித்தது.

காற்றில் பறந்து தமிழர் கலாசாரத்தை பிரதிபலிக்கும் முகமாக பறை, உடுக்கு, யாழ், தவில், மிருதங்கம், கடம் போன்ற இசைக்கருவிகளை இசைத்த கலைஞர்களை கொண்டதாக இந்தப் பட்டம் இருந்தது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *