மின்பிறப்பாக்கி இயங்காததால் சத்திரசிகிச்சைகள் அரைகுறையில் முடக்கம் , மந்திகை வைத்தியசாலையில் நோயாளர்கள் பெரும் அவதி

இன்று காலையில் மந்திகை ஆதார வைத்தியசாலை பகுதியில் மின்தடை ஏற்பட்டநிலையில் , மின் பிறப்பாக்கி உதவியுடன் வைத்திய சாலையின் செயல்பாடுகள் வழமைபோன்று இடம்பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின் பிறப்பாக்கி 2 மணித்தியாலங்களுக்கு மேல் இயங்கவில்லை என்றும் இதனால் மந்திகை ஆதாரவைத்தியசாலையின் அனைத்து நடவடிக்கைகளும் முடங்கிப்போயிருந்தன.

சாத்திரசிகிச்சைகள் அனைத்தும் அரைகுறையாக முடங்கிய நிலையில் , சத்திரசிகிச்சைக்காக மயக்கமருந்து ஏற்றபட்டவர்கள், ஸ்கேன் போன்ற வற்றுக்காக தயார் நிலையில் இருந்தவர்கள் நோயாளர்கள் அனைவரும் பெரும் அவதிப்படவேண்டியிருந்ததாக தெரியவருகிறது.

இந்த நிலையில் சத்திரசிகிச்சைக்கு பொறுப்பாக இருந்த வைத்தியர் மின்பிறப்பாக்கிக்கு பொறுப்பானவர்களை அவசரமாக தொடர்பு கொண்டபொழுதும் அவர்கள் அசண்டையீனமாக இருந்ததாகவும், இது போன்ற பிரச்சினைகளுக்கு தயார் நிலையில் இல்லாதிருந்ததாகவும் சம்பவத்தை நேரில் கணடவர்கள் கவலை வெளியிட்டார்கள்.
மந்திகை வைத்தியசாலையின் நிர்வாக குறைபாடுகள் தொடர்பாக நோயாளர்கள் பிரதேச மக்கள் மற்றும் நோயாளர்கள் குறைப்பட்டு கொண்டபொழுதும், இது தொடர்பாக நிர்வாகம் எதுவித நடவடிக்கைகளும் எடுக்காது அசண்டையீனமாக இருப்பதாக வருத்தம் தெரிவித்தார்கள்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *