கிளிநொச்சியில் 11 வயது மாணவி பரிதாபமாக பலி… இறுதிக்கிரியை செய்யக்கூட வழியில்லாமல் தவிக்கும் குடும்பம்!

கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் பதினொரு வயது மாணவி ஒருவர் கிணற்றில் வீழ்ந்து பலியாகியுள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த ச்சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பற்ற கிணற்றில் நீர் அள்ளிக்கொண்டிருந்த போது சிறுமி தவறி கிண்ற்றில் வீழ்ந்து மரணித்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அன்னைசாரதா வித்தியாலயத்தில் கல்வி கற்ற புவனேஸ்வரன் டிலானி என்ற சிறுமியே இவ்வாறு பரிதாபமாக மஉயிரிழந்துள்ளார்.

டிலானி குடும்பத்தின் மூத்த பிள்ளை என்பதுடன், மாணவியின் தந்தை நிரந்தர சுகயீனம் காரணமாக தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதவர் என்றும் , தாயின் உழைப்பிலேயே அவர்களின் குடும்பம் தங்கியுள்ளதாகவும் தெரியருகின்றது.

இந்நிலையில் டிலானியின் இறுதி கிரிகைகளை கூட மேற்கொள்ள முடியாத நிலையில் அவர்களின் குடும்ப வறுமை காணப்படுகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *