குற்றச்செயல்கள் தொடர்பில் தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்

நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் அமைதியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் (STF) 24 மணிநேர தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் பணிப்புரைக்கு அமைய இந்த விசேட பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாககவும் தெரிவிக்கபட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் இந்த இலங்கங்களுடன் தொடர்பு கொண்டு பொதுமக்கள் பாதாள உலககக் குழுவினர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுக்கள், அச்சுறுத்தி பணம் பறிப்பவர்கள், சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்போர் தொடர்பில் தகவல்களை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை 011 2580518 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல்களை வழங்க முடியும். அல்லது 011 2588499 என்ற தொலைநகல் இலக்கத்தினூடாக தகவல்களை வழங்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், commadantstf@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியூடாகவும் குற்றச் செயல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் தகவல் வழங்கும் நபர்கள் குறித்து இரகசிய தன்மை பேணப்படும் எனவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *